/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிப்.2ல் ஊராட்சி செயலர்கள் முற்றுகைப் போராட்டம்
/
பிப்.2ல் ஊராட்சி செயலர்கள் முற்றுகைப் போராட்டம்
ADDED : ஜன 09, 2024 12:28 AM

திருப்புல்லாணி, : ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம், துாய்மை காவலர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியம், புயல் வெள்ள பாதிப்புகளை சரி செய்த ஊராட்சி பணியாளர், துாய்மை காவலர், ஊராட்சி செயலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோருக்கு சிறப்பு ஊக்கத்தொகை ரூ.4000 உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.2ல் முற்றுகை போராட்டம் நடக்க உள்ளது.
பெரியபட்டினத்தை சேர்ந்த தமிழ்நாடு ஊராட்சி செயலர் சங்க ராமநாதபுரம் மாவட்ட துணைத்தலைவர் சேகு ஜலாலுதீன் கூறுகையில், பிப்.2ல் சென்னையில் ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.