/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடியில் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்
/
கடலாடியில் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்
ADDED : டிச 13, 2024 04:04 AM
கடலாடி: கடலாடி யூனியன் அலுவலகத்தில் ஒன்றியக் குழு கூட்டம் நடந்தது. தலைவர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். பி.டி.ஓ., ஜெய ஆனந்த் முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் முனிசாமி பாண்டியன் முன்னிலை வகித்தார். அலுவலக மேலாளர் முனியசாமி வரவேற்றார்.
கவுன்சிலர் ராஜேந்திரன்: சிறைக்குளம் ஊராட்சி மற்றும் தனிச்சயம் ஊராட்சி பகுதிகளில் காவிரி குடிநீர் வரத்து முழுவதுமாக இல்லை. இதனால் மக்கள் ஊருணி நீரை குடிப்பதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. குடிநீர் வாரிய பொறியாளரிடம் பேசி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஆத்தி, துணை சேர்மன் : ரோஜ்மா நகர் மன்னார் வளைகுடா கடற்கரையோரத்தில் கடந்த ஆண்டு ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கு இதுவரை எரியவில்லை. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது இருளில் சிரமப்படுகின்றனர்.
பி.டி.ஓ., ஜெயஆனந்த்: உடனடியாக பழுது பார்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கவுன்சிலர் முருகன்: நரிப்பையூர் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் ஆபத்தான நிலையில் உள்ளது. கடற்கரையோரப் பகுதியில் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கணக்காளர் ரமேஷ் நன்றி கூறினார்.

