/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பன்னீர் திராட்சை அதிக வரத்தால் விலைச் சரிவு: கிலோ ரூ.60க்கு விற்பனை

UPDATED : ஆக 14, 2025 06:56 AM
ADDED : ஆக 13, 2025 11:12 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்திற்கு வெளியூர்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் கடந்த வாரம் கிலோ ரூ.80க்கு விற்ற பன்னீர் திராட்சை தற்போதுரூ.60க்கு விற்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் குறைந்த அளவே சாகுபடி செய்யப்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலும் திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி ராமநாதபுரம் மார்க்கெட், வாரச்சந்தைகளில் வியாபாரிகள் விற்கின்றனர்.
தற்போது பன்னீர் திராட்சை வெளியூர்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் கடந்த மாதம் கிலோ ரூ.60 முதல் 80க்கு விற்றது தற்போது கிலோ ரூ.60க்கு விற்கப்படுகிறது. வெப்ப சலனம் காரணமாக பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறினர்.