/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்புல்லாணியில் பங்குனி பிரம்ம உற்ஸவம்
/
திருப்புல்லாணியில் பங்குனி பிரம்ம உற்ஸவம்
ADDED : மார் 17, 2024 11:42 PM

திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் நேற்று கொடியேற்றத்துடன் -பங்குனி பிரம்ம உற்ஸவம் துவங்கியுள்ளது. மார்ச் 25ல் பெரிய தேரோட்டம் நடக்கிறது.
திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் வைணவ திவ்ய தேசங்களில் 44 வதாக திகழ்கிறது.
பங்குனி பிரமோற்ஸவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அனுக்கை பூஜை நடந்தது. நேற்று காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் ஆதி ஜெகநாத பெருமாள் சன்னதி முன்புறமுள்ள கொடி மரத்திற்கு அபிஷேக அலங்கார தீபராதனைகள் நடந்தது.
பின்னர் கோயில் ஸ்தானிக பட்டாச்சாரியார்களால் கொடி பட்டம் ஏற்றப்பட்டு, தர்ப்பையால் சுற்றிலும் கட்டப்பட்டு பஞ்சமுக தீபாராதனை நடந்தது. நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மார்ச் 25ல் பெரிய தேரோட்டத்தில் நான்குரத வீதிகளிலும் உற்ஸவமூர்த்தி புறப்பாடு நடக்கிறது. தினமும் இரவில் சிம்ம வாகனம், அனுமார் வாகனம், கருட சேவை, சேஷ வாகனம், ஹம்ச வாகனம், சூரிய பிரபை வாகன புறப்பாடு நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், சரகப்பொறுப்பாளர் கிரிதரன் செய்கின்றனர்.

