/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழா கொடியேற்றம் ; மார்ச் 25ல் தேரோட்டம்

ADDED : மார் 18, 2024 06:34 AM

பரமக்குடி : -பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இக்கோயிலில் மார்ச் 1 பூச்சொரிதல் விழா நடந்தது.
தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. நேற்று காலை 11:00 மணிக்கு கோயில் கொடி மரத்தில் சிங்க கொடி ஏற்றி வைக்கப்பட்டு, அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு அம்மன் பூதகி வாகனத்தில் வீதி வலம் வந்தார்.
அப்போது பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுவாமி, தலைவர்களின் வேடமணிந்தும், பாரம்பரிய நடனமாடினர்.
4ம் நாள் மார்ச் 20 அம்மன் காளி அலங்காரம், மாலை 6:00 மணிக்கு வண்டி மாகாளி சூரசம்ஹாரம் நடக்கிறது.
மார்ச் 25 காலை துவங்கி அக்னி சட்டி ஊர்வலம் இரவு 8:00 மணிக்கு மின்தீப அலங்கார தேரில் அம்மன் நான்கு மாட வீதிகளில் வலம் வருவர்.
மார்ச் 27ல் அதிகாலையில் பால்குட நிகழ்ச்சி நடக்கிறது.
ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள், ஆயிர வைசிய சபையினர் செய்துள்ளனர்.