ADDED : பிப் 19, 2024 05:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
-ராமநாதபுரம் : ராமநாதபுரம் சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் காகித மடிப்புக்கலை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
சி.எஸ்.ஐ., கல்வியியல்கல்லுாரி தாளாளர் மனோகரன் மார்ட்டின் பயிற்சியை துவக்கி வைத்தார். அறிவியல் இயக்கத்தின் மாவட்டத்தலைவர் லியோன் தலைமை வகித்தார். கல்வியியல் கல்லுாரி முதல்வர் ஆனந்த் வரவேற்றார். மாவட்ட செயலாளர் காந்தி, காகித மடிப்புக்கலை மாநில பயிற்சியாளர் அமலராஜன் பயிற்சி அளித்தார்.
மாவட்ட நிர்வாகிகள் ஜெரோம், பரமேஸ்வரன், விஜயராம், சாகுல் மீரான் உட்பட நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர். பயிற்சியில்ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
காகித மடிப்பின் மூலம் பல்வேறு வடிவங்களை செய்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

