/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.10 கோடி வருமானம் ஈட்டிய பரமக்குடி ஸ்டேஷன் அனைத்து ரயில்களும் நிற்க வலியுறுத்தல்
/
ரூ.10 கோடி வருமானம் ஈட்டிய பரமக்குடி ஸ்டேஷன் அனைத்து ரயில்களும் நிற்க வலியுறுத்தல்
ரூ.10 கோடி வருமானம் ஈட்டிய பரமக்குடி ஸ்டேஷன் அனைத்து ரயில்களும் நிற்க வலியுறுத்தல்
ரூ.10 கோடி வருமானம் ஈட்டிய பரமக்குடி ஸ்டேஷன் அனைத்து ரயில்களும் நிற்க வலியுறுத்தல்
ADDED : செப் 27, 2024 04:44 AM
பரமக்குடி: பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன் கடந்த ஆண்டில் ரூ.10 கோடி வருமானம் ஈட்டி என்.எஸ்.ஜி., 4 என்ற நிலைக்கு உயர்ந்துள்ள நிலையில் இங்கு அனைத்து ரயில்களும் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
மதுரை- ராமேஸ்வரம் ரயில்வே மார்க்கத்தில் பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன் எப்போதும் அதிக வருமானம் ஈட்டுகிறது. தெற்கு ரயில்வே கோட்டம் மற்றும் மாநில அளவில் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வருமானத்தின் அடிப்படையில் தரம் பிரிக்கப்படுகிறது.
இதன்படி 2023--24 ல் பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து முன்பதிவு டிக்கெட் மூலம் 1 லட்சத்து 56 ஆயிரத்து 762 பயணிகள், முன்பதிவு இல்லா டிக்கெட்டில் 4 லட்சத்து 28 ஆயிரத்து 158 பயணிகள் என 5 லட்சத்து 83 ஆயிரத்து 334 பேர் பயணித்துள்ளனர்.
மேலும் பரமக்குடியில் இருந்து முன் பதிவு பயணச்சீட்டு மூலம் 7 கோடியே 97 லட்சத்து 81 ஆயிரத்து 770 ரூபாய் மற்றும் முன்பதிவு இல்லா டிக்கெட் மூலம் 2 கோடியே 17 லட்சத்து 73 ஆயிரத்து 60 ரூபாய் என 10 கோடியே 15 லட்சத்து 54 ஆயிரத்து 830 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இதன்படி 52 வது இடத்திற்கு முன்னேறிய பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன் என்.எஸ்.ஜி., 4 தரத்திற்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் அம்ரித் பாரத் திட்டத்தில் பணிகள் நடக்கும் சூழலில் இரண்டாவது பிளாட்பாரத்தில் பயணிகள் நிழற்குடை மற்றும் மின் விளக்கு வசதிகளை அதிகப்படுத்த வேண்டியுள்ளது.
ரயில் பயனாளர்கள் சங்க நிர்வாகி ஜெகன் கூறியதாவது: ரயில்வே ஸ்டேஷனுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் வகையிலும் பயணிகள் வசதி கருதியும் பெரோஸ்பூர்- - ராமேஸ்வரம், பெரோஸ்பூர் -- ஹம்சபார் அதிவிரைவு ரயில், அயோத்தி --ராமேஸ்வரம் வாராந்திர அதி விரைவு ரயில், ஹூப்ளி --ராமேஸ்வரம் விரைவு ரயில், செகந்திராபாத்- - ராமேஸ்வரம் சிறப்பு ரயில், கன்னியாகுமரி --ராமேஸ்வரம் அதிவிரைவு ரயில் உள்ளிட்டவைகளுக்கு கூடுதல் நிறுத்தங்கள் வழங்க வேண்டும். மேலும் பாம்பன் பாலம் திறப்புக்கு பிறகு இயக்கப்பட உள்ள மங்களூர் --ராமேஸ்வரம் ரயில் உட்பட வரவுள்ள மற்ற புதிய அனைத்து ரயில்களும் பரமக்குடியில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.