/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி மகளிர் கைத்தறி நெசவாளருக்கு விருது துாக்கணாங்குருவி, பாம்பன் பாலம் சேலை தேர்வு
/
பரமக்குடி மகளிர் கைத்தறி நெசவாளருக்கு விருது துாக்கணாங்குருவி, பாம்பன் பாலம் சேலை தேர்வு
பரமக்குடி மகளிர் கைத்தறி நெசவாளருக்கு விருது துாக்கணாங்குருவி, பாம்பன் பாலம் சேலை தேர்வு
பரமக்குடி மகளிர் கைத்தறி நெசவாளருக்கு விருது துாக்கணாங்குருவி, பாம்பன் பாலம் சேலை தேர்வு
ADDED : செப் 26, 2024 03:09 AM

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மகளிர் கைத்தறி நெசவாளர்களின் துாக்கணாங்குருவி மற்றும் பாம்பன் பாலம் டிசைன் சேலைகள் மாநில அளவில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்றன.
பரமக்குடி, எமனேஸ்வரம் பகுதிகளில் 80க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த ஐயாயிரத்திற்கு மேற்பட்ட நெசவாளர்கள் வீடுகளில் தறி மேடை அமைத்து கைத்தறியில் நுால் சேலை, பம்பர் மற்றும் பட்டுப் புடவைகள் நெய்கின்றனர்.
தொடர்ந்து 4 வது ஆண்டாக பரமக்குடி நுால் சேலைக்கு மாநில அளவிலான முதல் பரிசு கிடைத்துள்ளது.
பரமக்குடி அன்னை சாரதா மகளிர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பெண் உறுப்பினர் பிரேமா துாக்கணாங்குருவி கூடுகளை நுால் சேலையில் வடிவமைத்துள்ளார். இதற்காக கருப்பு, கே புளூ, மஸ்டர்டு, பச்சை நிறங்களில் 120 ஊக்கு ஜக்கார் பெட்டி மூலம் நெய்யப்பட்டுள்ளது.
இதே போல் லோக மான்ய திலகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் அலமேலு, பேபி ஆகியோர் டசர் வண்ண கலவை மூலம் ராமேஸ்வரம் பாம்பன் பாலம் திறப்பு மற்றும் கடல் நீர் காட்சிகளை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.
மேலும் கரைகளில் இருபுறங்களிலும் மீன் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆங்காங்கே சிறிய ரக படகுகள் நேர்த்தியாக உள்ளன. இதற்காக புட்டாவில் 480 ஊக்கு ஜக்கார்டு பெட்டி பயன்படுத்தப்பட்டுள்ளது.
துாக்கணாங்குருவி மற்றும் பாம்பன் பாலத்திற்கு முறையே முதல் பரிசு ரூ. 5 லட்சம் மற்றும் 2ம் பரிசு ரூ.3 லட்சம் கிடைத்துள்ளது. இதனை நேற்று முதல்வர் ஸ்டாலின் சென்னையில் வழங்கினார். பரிசுகள் பெற்ற மகளிர் நெசவாளர்களை பரமக்குடி கைத்தறி உதவி இயக்குனர் சேரன் வாழ்த்தினர்.