ADDED : மார் 05, 2026 05:37 AM

அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் இருந்து 50வது ஆண்டாக திருச்செந்துார் நோக்கி ஏராளமான பக்தர்கள் சைக்கிள் யாத்திரை சென்றனர்.
பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வைகை ஆறு படித்துறையில் சக்தி குமரன் செந்தில் கோயில் உள்ளது. இங்கு மாசி மக விழாவையொட்டி தினமும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
மேலும் திருவிளக்கு வழிபாடு, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். 50வது பொன்விழா ஆண்டாக குருவடியார் இலக்குமணன் தலைமையில் திருச்செந்துார் நோக்கி சைக்கிள் யாத்திரையை பக்தர்கள் மேற்கொண்டனர். 3நாட்கள் யாத்திரை சென்று திருச்செந்துாரில் நேர்த்திக்கடன் செலுத்தி மீண்டும் சைக்கிளில் பரமக்குடி திரும்ப உள்ளனர்.
