ADDED : மே 24, 2026 02:52 AM
அ நிறம் | அளவு
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மே 18ல் இறந்தவர் உடலை பார்க்கச் சென்று பரமக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து 13 பெண்கள், டிரைவர் உட்பட 17 பேர் சரக்கு வாகனத்தில் வாகைகுளம் திரும்பினர். ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை சந்திப்பு வாகைகுளம் பகுதியில் சரக்கு வாகனம் மீது லாரி மோதி விபத்திற்குள்ளானது.
இதில் பூபதி 50, சம்பவ இடத்தில் பலியானார். அடுத்தடுத்து அமுதா 45, அருணா 50, ராமேஸ்வரி 56, இறந்தனர். தொடர்ந்து நேற்று மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கீழாம்பல் ஈஸ்வரி 34, பலியானார். பலியான பெண்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
