/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி துர்கை அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
/
பரமக்குடி துர்கை அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
ADDED : ஏப் 16, 2025 08:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : பரமக்குடி சின்ன கடை தெரு துர்கை அம்மன் கோயிலில் 44ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
மாலை புதுச்சேரி பூதகன இசை குழுவினரின் சிவ கயிலாய வாத்திய இசை முழங்க சிவன் பார்வதி நடன நிகழ்வு நடந்தது. பெண்கள் பூத்தட்டுகளை ஏந்தி வீதி வலம் வந்தனர். இரவு 9:00 மணிக்கு ஊர்வலம் கோயிலை அடைந்தது. அம்மனுக்கு மலர் அபிஷேகம் செய்யப்பட்டு பூக்கள் பரப்பப்பட்டது. காலை தீபாராதனை காண்பிக்கப்பட்டு பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

