/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி, எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபையினர் ஆலோசனைக் கூட்டம்
/
பரமக்குடி, எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபையினர் ஆலோசனைக் கூட்டம்
பரமக்குடி, எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபையினர் ஆலோசனைக் கூட்டம்
பரமக்குடி, எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபையினர் ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஜூலை 23, 2025 10:09 PM
பரமக்குடி; பரமக்குடி, எமனேஸ் வரம் சவுராஷ்டிரா சபையில் சவுராஷ்டிரா அரசியல் நடவடிக்கை குழு சார்பில் அரசியல் பிரதிநிதித்துவம் பெறுவதற்கான ஆலோ சனைக் கூட்டம் நடந்தது.
குழு ஒருங்கிணைப் பாளர் ஓய்வு பெற்ற டி.ஜி.பி., கிஷோர் குமார் பேசினார். அப்போது தமிழகம் முழுவதும் 14 லட்சத்திற்கு மேற்பட்ட சவுராஷ்டிரா சமூக ஓட்டுகள் உள்ளது. ஆகவே 2026 தேர்தலில் மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம், கும்ப கோணம், திண்டுக்கல், சேலம் ஆகிய தொகுதிகளில் அரசியல் கட்சிகள் சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர்களை வேட் பாளர்களாக அறிவிக்க வேண்டும்.
இதற்காக அனைத்து கட்சிகளுக்கும் துாது குழுக்களை அனுப்பவுள்ளோம். சிறுபான்மை மொழி யினருக்காக ஏற்படுத்தப்பட்ட மாநகராட்சிக்கு சரியாக பணி செய்ய நிதி ஒதுக்கி, அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கூட்டத்தில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.என்.ராமநாதன், சிங்கப்பூர் சவுராஷ்ட்ரா அசோசியேஷன் நிர்வாகி சரவணன் பேசினர். பரமக்குடி, எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபையில் நடந்த கூட்டத்தில், தலைவர்கள் நாக நாதன், கோவிந்தன் உட்பட நிர்வாகிகள், சமூக மக்கள் கலந்து கொண்டனர்.