/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி எமனேஸ்வரம் மாணவிகள் மாநில பளு துாக்கும் போட்டிக்கு தேர்வு
/
பரமக்குடி எமனேஸ்வரம் மாணவிகள் மாநில பளு துாக்கும் போட்டிக்கு தேர்வு
பரமக்குடி எமனேஸ்வரம் மாணவிகள் மாநில பளு துாக்கும் போட்டிக்கு தேர்வு
பரமக்குடி எமனேஸ்வரம் மாணவிகள் மாநில பளு துாக்கும் போட்டிக்கு தேர்வு
ADDED : செப் 07, 2025 10:57 PM
பரமக்குடி : பரமக்குடி, எமனேஸ் வரம் பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த மாணவிகள் மதுரை மண்டல அளவிலான பளு துாக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், முதல்வர் கோப்பைக்கான மதுரை மண்டல அளவிலான பளு துாக்கும் போட்டிகள் செப். 3 மற்றும் 4ல் நடந்தது. மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இதில், பரமக்குடி எமனேஸ்வரம் பிரண்ட்ஸ் ஜிம் மாணவிகள் பங்கேற்ற நிலையில் 9 பேர் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இதன்படி பள்ளிகளுக்கு இடையிலான 44 கிலோ உடல் எடை பிரிவில் வைஷ்ணவி தங்கம், ஸ்ரீநிதி வெண்கலம், 48 கிலோ பிரிவில் கீர்த்திகா வெள்ளி, சரண்யா வெண்கலம், 53 கிலோ பிரிவில் சந்தியா வெள்ளி, 63 கிலோ பிரிவில் பூஜா வெள்ளி பதக்கம் வென்றார்.
கல்லுாரிகள் பிரிவில் 48 கிலோ உடல் எடையில் ரோஹிணி வெள்ளி, 58 கிலோ பிரிவில் கீதா தங்கம் (சென்னை மண்டலம்), துர்காதேவி வெண்கலம் வென்றார்.
ஒட்டுமொத்தமாக 2 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களை பெற்று அனைவரும் அடுத்த மாதம் சென்னையில் நடக்க உள்ள மாநிலப் போட்டிக்கு தேர்வாகினர். இவர்களை எமனேஸ்வரம் பிரண்ட்ஸ் ஜிம் ஆசிரியர்கள், நிர்வாகிகள், பெற்றோர்கள் வாழ்த்தினர்.