/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி: இமானுவேல் சேகரன் 101 வது பிறந்த நாள் அரசு விழா 196 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

ADDED : அக் 09, 2025 11:12 PM

பரமக்குடி: பரமக்குடியில் இமானுவேல் சேகரன் 101 வது பிறந்த நாளையொட்டி அரசு விழா நடந்தது.
அமைச்சர் கயல்விழி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் முன்னிலை வகித்தனர். இமானுவேல் சேகரன் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ரூ. 17 லட்சம் மதிப்பில் 17 பேருக்கு இ-பட்டா, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 10 பேருக்கு கனவு இல்லம் திட்டத்தில் ரூ. 35 லட்சம் மதிப்பிலும், தாட்கோ சார்பில் 52 பேருக்கு 6500 ரூபாய் கல்வி உதவித்தொகை, வேளாண் பொறியியல் துறை சார்பில் 3 பேருக்கு 2 லட்சத்து 4272 ரூபாய் மதிப்பில் களையெடுக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 37 பேருக்கு தையல் இயந்திரம், மூவருக்கு இஸ்திரி பெட்டி உட்பட 196 பேருக்கு 89 லட்சத்து 59 ஆயிரத்து 488 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி, டி.ஆர்.ஓ., கோவிந்தராஜலு, பரமக்குடி ஆர்.டி.ஓ., சரவண பெருமாள், நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, துணைத் தலைவர் குணா, இமானுவேல் சேகரன் மகள் பிரபராணி, தாசில்தார் வரதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.