/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி அரசு கல்லுாரி மாணவர்கள் தென்னிந்திய போட்டியில் பங்கேற்பு
/
பரமக்குடி அரசு கல்லுாரி மாணவர்கள் தென்னிந்திய போட்டியில் பங்கேற்பு
பரமக்குடி அரசு கல்லுாரி மாணவர்கள் தென்னிந்திய போட்டியில் பங்கேற்பு
பரமக்குடி அரசு கல்லுாரி மாணவர்கள் தென்னிந்திய போட்டியில் பங்கேற்பு
ADDED : நவ 27, 2024 06:42 AM
பரமக்குடி : பரமக்குடி அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் தென்னிந்திய அளவிலான பளு துாக்குதல் மற்றும் ஜூடோ போட்டியில் பங்கேற்கின்றனர்.
அழகப்பா பல்கலை அணிகளுக்கு இடையிலான பளு துாக்கும் போட்டிகளில் 5 பேர் தேர்வு பெற்றனர். இதன்படி ஆந்திர மாநிலம் குண்டூர் நாகார்ஜுனா பல்கலையில் தென்னிந்திய அளவிலான போட்டிகள் நவ.26 முதல் 28 வரை மாணவிகளுக்கு நடக்கிறது.
இதில் 48 கிலோ எடைப் பிரிவில் ரூபினி, 49 கிலோவில் தேஜா, 55 கிலோ பிரிவில் கீர்த்தனா பாரதி பங்கேற்கின்றனர். இதே போல் நவ.30 முதல் டிச.2 வரை நடக்கும் மாணவர்களுக்கான போட்டியில் 55 கிலோ எடையில் ரிஷிகேசன், 61 கிலோ எடை பிரிவில் சூரியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்க சென்றுள்ளனர்.
மேலும் 100 கிலோ எடை பிரிவில் ஜூடோவில் முதலிடம் பெற்ற டாவின் விக்னேஷ் போபால் மாநிலத்தில் நடக்கும் தென்னிந்திய பல்கலைகளுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்க சென்றுள்ளார்.
இவர்களை கல்லுாரி முதல்வர் சிவகுமார், உடற்கல்வி இயக்குனர் பிரசாத் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர்.