ADDED : ஆக 28, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி வக்கீல் சங்க கூட்டம் தலைவர் இளமுருகன் தலைமையில் நடந்தது.செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். அப்போது ராமநாதபுரம் நுகர்வோர் நீதிமன்றம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்திற்கு மாற்ற அறிவிப்பு வந்துள்ளது. தொடர்ந்து ராமநாதபுரத்திலேயே நீதிமன்றம் இயங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று ஒரு நாள் பணி புறக்கணிப்பு செய்வது என தீர்மானித்தனர்.
இதன்படி நேற்று பரமக்குடி வக்கீல்கள் 238 பேர் நீதிமன்ற செயல்பாட்டில் இருந்து ஒரு நாள் பணி புறக்கணிப்பு செய்தனர்.
––
