/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி: பாலத்தின் கீழ் ரோட்டில் மெகா பள்ளம்
/
பரமக்குடி: பாலத்தின் கீழ் ரோட்டில் மெகா பள்ளம்
ADDED : நவ 28, 2024 05:10 AM

பரமக்குடி: ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி நகருக்குள் நுழையும் இடத்தில் நான்கு வழிச் சாலை பாலத்தின் கீழ் பகுதியில் ரோட்டில் மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளதால் இரண்டு மாதங்களாக வாகனங்கள் தள்ளாடுகின்றன.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி அரியனேந்தல் கிராம எல்லை வரை இருவழிச் சாலையாக இருக்கிறது. தொடர்ந்து மதுரை செல்லும் வழியில் ரயில்வே தண்டவாளம் குறுக்கிடுவதால் நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டு மேம்பாலம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் பரமக்குடி நகருக்குள் நுழைய நான்கு வழிச்சாலை பாலத்தின் கீழ் பகுதியில் செல்ல வேண்டியுள்ளது. இப்பகுதி முழுமையான ஹேர் பின் பெண்ட் வளைவாக இருக்கிறது.
ரோடு திறக்கப்பட்ட நாள் முதல் மின்விளக்கு வசதியின்றி இரவு நேரங்களில் அச்சத்துடன் வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனர். தொடர்ந்து வளைவான பகுதியில் மழை நீர் தேங்கி மெகா பள்ளங்கள் ஏற்பட்டுஉள்ளது.
நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் உடனடியாக அப்பகுதியில் ஏற்பட்டுஉள்ள பள்ளத்தை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுப்பதுடன், மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள்கோரிக்கை விடுத்துஉள்ளனர்.