/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு, வருவாய் குறைவால் பரமக்குடி நகராட்சி சிறப்புநிலை அந்தஸ்துக்கு சிக்கல்
/
காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு, வருவாய் குறைவால் பரமக்குடி நகராட்சி சிறப்புநிலை அந்தஸ்துக்கு சிக்கல்
காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு, வருவாய் குறைவால் பரமக்குடி நகராட்சி சிறப்புநிலை அந்தஸ்துக்கு சிக்கல்
காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு, வருவாய் குறைவால் பரமக்குடி நகராட்சி சிறப்புநிலை அந்தஸ்துக்கு சிக்கல்
ADDED : மார் 09, 2026 08:00 AM

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி முதல் நிலையிலிருந்து சிறப்பு நிலையாக தரம் உயர்த்தப்படும் என்ற நிலையில் காலி பணியிடங்கள் அதிகரிப்பு, வரி வருவாய் குறைவு ஆகிய காரணங்களால் தரம் உயர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாறாக தேர்வு நிலையாக தரம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
பரமக்குடி 1964ல் எமனேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகள் இணைக்கப்பட்டு நகராட்சியாக உருவானது. இங்கு கைத்தறி பட்டு நெசவு, குண்டு மிளகாய் விளைச்சல் என வணிகத்திற்கு பெயர் பெற்றுள்ளது.
2024 ஜன.,ல் முதல் நிலையிலிருந்து சிறப்பு நிலையாக உயர்த்தும் நோக்கில் தெளிச்சாத்தநல்லுார், வேந்தோணி, உரப்புளி உள்ளிட்ட ஊராட்சிகளின் சில வார்டுகள் நகராட்சியுடன் இணைக்க திட்டமிட்டனர்.
2011 கணக்கெடுப்பின் படி 96 ஆயிரம் பேர் வசித்த நிலையில் தற்போது ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
தற்போது வரி வருவாயில் 145 நகராட்சிகளில் கடைசி இடத்தில் உள்ளதாக கடந்த நகராட்சி கூட்டத்தில் கமிஷனர் தாமரை தெரிவித்தார். இச்சூழலில் சுகாதார அலுவலர் பணியிடம் 2 ஆண்டாக காலியாக உள்ளது.
இதே போல் டவுன் பிளானிங் ஆய்வாளர், பில் கலெக்டர், பிட்டர், ஓவர்சீயர், உதவியாளர் மற்றும் 6 ஜூனியர் அசிஸ்டன்ட் இருக்க வேண்டிய இடத்தில் 4 பேர் நியமிக்கப்படாமல் காலியான பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கமிஷனர், இன்ஜினியர் பணியிடங்கள் 3 ஆண்டுகளில் பலமுறை மாற்றம் செய்யப்பட்டதுடன், கூடுதல் பணியாக வந்து செல்லும் நிலையும் இருந்துள்ளது.
குறிப்பாக 2021 கணக்கெடுப்பின் படி 90.21 சதவீதம் மக்கள் கல்வி அறிவு பெற்ற நகராட்சியாக உள்ளது.1918 முதல் தாலுகா தலைமையகமாக விளங்குகிறது.
ஆகவே பல்வேறு சிறப்புகள் பெற்ற பரமக்குடி நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த அரசு கவனம் செலுத்த வேண்டும்.
இதுகுறித்து தலைவர் சேது கருணாநிதி கூறுகையில், நகராட்சியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதனனை சந்தித்து கோரிக்கைவிடுத்துள்ளேன் என்றார்.

