/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எட்டு கரத்துடன் காளி அலங்காரத்தில் பரமக்குடி முத்தால பரமேஸ்வரி
/
எட்டு கரத்துடன் காளி அலங்காரத்தில் பரமக்குடி முத்தால பரமேஸ்வரி
எட்டு கரத்துடன் காளி அலங்காரத்தில் பரமக்குடி முத்தால பரமேஸ்வரி
எட்டு கரத்துடன் காளி அலங்காரத்தில் பரமக்குடி முத்தால பரமேஸ்வரி
ADDED : ஏப் 08, 2025 05:40 AM

பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி விழாவில் காளி அலங்காரத்தில் அம்மன் உலா வந்தார்.
இக்கோயிலில் ஏப்.,3ல் கொடி மரத்தில் சிங்கக்கொடி ஏற்றப்பட்டு பங்குனி விழா துவங்கி நடக்கிறது. முக்கிய விழாவாக நேற்று காலை அம்மன் 8 கரத்துடன் சுடர் கிரீடம் தாங்கி காளி அலங்காரமாகினார்.
கைகளில் சங்கு, சக்கரம், உடுக்கை, வாள், சூலம், நாகம் ஏந்தியபடி நடன கோலத்தில் இருந்தார்.
காலை 11:00 மணிக்கு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு கோயிலில் இருந்து புறப்பாடாகினார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற அம்மன் சின்னக்கடை வீதியில் வன்னியகுல சத்திரிய மகாசபையின் மண்டகப்படியில் அமர்ந்தார்.
அங்கு மதியம் 2:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் இரவு அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலை அடைந்தார். குழந்தைகள், பெரியவர்கள் பல்வேறு அம்மன் மற்றும் சுவாமிகளின் வேடம் அணிந்து வந்தனர்.