/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி முத்தாலம்மன் அலங்கார தேரில் நான்கு மாட வீதியில் பவனி; அக்னிச்சட்டி ஏந்திய பக்தர்கள்

ADDED : ஏப் 13, 2025 04:45 AM

பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி விழாவில் அம்மன் நான்கு மாட வீதிகளில் மின் அலங்கார தேரில் பவனி வந்தார். நாள் முழுவதும் ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி ஏந்தியும், வேல் குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோயிலில் ஏப்.,2 இரவு காப்பு கட்டப்பட்டு ஏப்.,3 காலை சிங்க கொடி ஏற்றப்பட்டு பங்குனி விழா துவங்கியது. ஏப்.,6ல் வண்டி மாகாளி உற்ஸவமும், நேற்று முன்தினம் இரவு அம்மன் ராஜ அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் உலா வந்தார்.
நேற்று காலை துவங்கி ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், வேல் குத்தியும் அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இரவு 7:00 மணிக்கு அம்மன் சர்வ அலங்காரத்துடன் அலங்காரமாகி ஏகாந்த சேவையில் இருந்தார்.
பின்னர் மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு இரவு 8:10 மணிக்கு மின் தீப தேரில் அமர்ந்தார். அங்கு சக்தி கோஷம் முழங்க தீபாராதனை காண்பிக்கப்பட்டு மேள தாளங்கள், வாண வேடிக்கை முழங்க அம்மன் தேர் கிளம்பியது.
பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க ஆடி அசைந்து வந்த தேர் இரவு 9:30 மணிக்கு நிலையை அடைந்தது. பின்னர் தேரிலிருந்து அம்மன் இறங்கி கோயில் மூலஸ்தானத்தை அடைந்தார். நாளை பல ஆயிரம் பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுக்க உள்ளனர்.