/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரயில்வே பிளாட்பாரங்களில் கூடுதல் கூரை தேவை பரமக்குடி பயணிகள் எதிர்பார்ப்பு

ADDED : ஜன 20, 2025 05:08 AM
பரமக்குடி: பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் நிலையில், பயணிகள் வசதிக்காக பிளாட்பார்ம்களில் கூரை கூடுதலாக அமைக்க வலியுறுத்தினர்.
பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கு ஆண்டுக்கு 10 லட்சத்திற்கு மேற்பட்ட பயணிகள் பரமக்குடியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். ரூ.10 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது.
இந்நிலையில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் லிப்ட் வசதி, நவீன எல்.இ.டி., திரைகள், ஓய்வறை, ஆர்ச், காம்பவுண்ட் சுவர் என சீரமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் 3 பிளாட்பார்ம்கள் உள்ள நிலையில் பயணிகள் ரயிலுக்காக காத்திருக்க கூரை வசதி குறைவாகவே காணப்படுகிறது. மேலும் கடந்த ஓராண்டுக்கு மேலாக நடக்கும் திட்ட பணிகளை விரைந்து முடிக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இத்துடன் அதிகமான வருமானம் வரும் ஸ்டேஷனில் அனைத்து வகையான தொலைதூர ரயில்களும் நின்று செல்ல ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.