/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் வைகாசி விசாக விழா
/
பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் வைகாசி விசாக விழா
பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் வைகாசி விசாக விழா
பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் வைகாசி விசாக விழா
ADDED : ஜூன் 11, 2025 07:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் படித்துறையில் அமைந்துள்ள சக்தி குமரன் செந்தில் கோயிலில் 10ம் ஆண்டு வைகாசி விசாக விழா நடந்தது.
நேற்று முன்தினம் வைகாசி விசாக விழாவையொட்டி காலை 10:00 மணிக்கு ஆறுமுக பெருமான் சண்முகர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை செந்தில் ஆண்டவர் இந்திர விமானத்தில் தேரில் திருவீதி உலா வந்தார். முக்கிய வீதிகளில் வலம் வந்து இரவு 9:00 மணிக்கு சுவாமி கோயிலை அடைந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அறங்காவலர் குழு தலைவர் இலக்குமணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.