தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடி புகையும் குப்பைக் கிடங்கு :ராம்நகர் மக்கள் முற்றுகை போராட்டம்

பரமக்குடி புகையும் குப்பைக் கிடங்கு :ராம்நகர் மக்கள் முற்றுகை போராட்டம்

பரமக்குடி புகையும் குப்பைக் கிடங்கு :ராம்நகர் மக்கள் முற்றுகை போராட்டம்


UPDATED : ஜூலை 06, 2026 04:05 PM

ADDED : ஜூலை 06, 2026 04:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2026 04:05 PM ADDED : ஜூலை 06, 2026 04:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரமக்குடி:பரமக்குடி அருகில் நகராட்சி குப்பை கிடங்கில் இருந்து வெளிப்படும் புகை, துர்நாற்றத்தால் ராம்நகர் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் நேற்று அங்கு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரமக்குடி அருகே ராம்நகரில் 38 ஆண்டுகளாக 140 குடும்பங்கள் வசிக்கின்றன. இதன் அருகே நகராட்சி குப்பை கிடங்கு செயல்படுகிறது. கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைக்கு தீ வைக்கப்படுவதால் புகை மூட்டத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து நேற்று காலையில் கிராம மக்கள் நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு அங்கு குப்பையை கொட்ட விடாமல் தடுத்து நிறுத்தினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது குறித்து கிராம மக்களுக்கு கூறிய போது: பரமக்குடியில் 3 இடங்களில் குப்பை மறுசுழற்சி செய்ய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மையத்தில் குப்பையை சேர்க்காமல் தொடர்ந்து கிடங்கில் கொட்டுகின்றனர். இதனால் குழந்தைகள், முதியவர்கள் மூச்சு திணறால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பெறுவது வழக்கமாகியுள்ளது. அதேபோல் அருகில் உள்ள நெசவாளர்கள் உட்பட ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குப்பை கிடங்கை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us