ADDED : செப் 14, 2026 12:54 AM

நகராட்சி கவனிக்குமா...
பரமக்குடி: -பரமக்குடி வைகை ஆற்றில் கோழி மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. அவற்றை அகற்ற நகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும் என மக்கள் வலி யுறுத்தினர்.
பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட சின்னக் கடை தெரு, பெரிய கடை, உழவர் சந்தை, எமனேஸ்வரம் என ஒவ்வொரு தெருவிலும் ஏராளமான இறைச்சி கடைகள் உள்ளன.
இங்கு சேகரிக்கப்படும் கோழி இறகுகள், ஆடு, மீன்களின் எஞ்சிய கழிவுகளை வைகை ஆற்றில் கொட்டுவது அதிகரித்துள்ளது.
இதனால் ஏராளமான தெரு நாய்கள், பன்றிகள் திரிகின்றன.
இவை மக்கள் ஆற்றில் நடந்து செல்லும் போது அச்சத்தை உண்டாக்குவதாக இருக்கிறது.
முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை பொழுது போக்கு இடமாக வைகை ஆறு திகழும் நிலையில் இது போன்ற கழிவுகளால் சுகாதாரக் கேடு அதிகரித் துள்ளது.
எனவே இறைச்சி கடைகள் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இது போன்ற கழிவுகளை கொட்டுவோரை கண்டறிந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
