/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி வ.உ.சி., பள்ளி மாநில கால்பந்து போட்டியில் முதலிடம்
/
பரமக்குடி வ.உ.சி., பள்ளி மாநில கால்பந்து போட்டியில் முதலிடம்
பரமக்குடி வ.உ.சி., பள்ளி மாநில கால்பந்து போட்டியில் முதலிடம்
பரமக்குடி வ.உ.சி., பள்ளி மாநில கால்பந்து போட்டியில் முதலிடம்
ADDED : ஜூலை 02, 2025 11:30 PM

பரமக்குடி: பரமக்குடி வ.உ.சி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான கால்பந்து போட்டியில் முதலிடம் பெற்றனர்.
திருவாடானை அருகே சூராணம் பள்ளியில் மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிகள் நடந்தது.
இதில் பரமக்குடி, துாத்துக்குடி, தேவகோட்டை, இளையான்குடி, எமனேஸ்வரம் உள்ளிட்ட பல பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.தொடர்ந்து இறுதிப் போட்டியில் வ.உ.சி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அணி வெற்றி பெற்று முதல் பரிசு வென்றது.
வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ராஜ்குமார் ஆகியோரை முதல்வர் சுகன்யா, தலைவர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் மகேஸ்வரன், கோவிந்தராஜா, ராதாகிருஷ்ணன், லோகநாத முருகன், சபரி முத்து, வின்சென்ட் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பாராட்டினர்.