/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி நெசவாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ரிபேட் தொகை வழங்க கோரிக்கை

ADDED : அக் 18, 2024 05:07 AM

பரமக்குடி: பரமக்குடி நெசவாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ரிபேட் தொகையை உடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
எமனேஸ்வரத்தில் நடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு பரமக்குடி, எமனேஸ்வரம் அனைத்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சொசைட்டிகளின் உறுப்பினர்களின் பெடரேஷன் தலைவர் சேஷய்யன் தலைமை வகித்தார். செயலாளர்கள் கோதண்டராமன், ருக்மாங்கதன், கூட்டுறவு பணியாளர் சங்க தலைவர் ஜோதி கிருஷ்ணன், முன்னாள் கோ ஆப் டெக்ஸ் இயக்குனர் சந்திரசேகர் முன்னிலை வகித்தனர்.
பொருளாளர் கணேஷ் பாபு வரவேற்றார். அப்போது, பரமக்குடி பகுதியில் கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு வழங்க வேண்டிய ரூ. 10 கோடி அளவிலான ரிபேட் பாக்கி தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தறிக்கூலியை வங்கி காசோலையில் வழங்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்களை அலைக்கழிக்கும் கைத்தறி இயக்குனரை துறையை விட்டு விலக கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பரமக்குடி கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு அக்., 21ல் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வலியுறுத்தப்பட்டது. பணியாளர் சங்க செயலாளர் கண்ணன், நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் உறுப்பினர் பங்கேற்றனர்.