ADDED : மார் 14, 2026 07:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: சட்டசபை தேர்தலையொட்டி மக்களிடம் அச்சத்தை போக்கி 100 சதவீதம் ஓட்டளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று ராமேஸ்வரம் போலீஸ் ஸ்டேஷன் முதல் திட்டக்குடி, தேவர் சிலை, வேர்க்கோடு வரை துணை ராணுவ வீரர்கள், போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
ராமேஸ்வரம் டி.எஸ்.பி., (பொறுப்பு) சுகுமாறன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் சரவணன், போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் பிரதாப் சிங், எஸ்.ஐ., முத்து முனியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

