/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளிகளில் ஆதார் முகாம்கள் நடத்த பெற்றோர் எதிர்பார்ப்பு
/
பள்ளிகளில் ஆதார் முகாம்கள் நடத்த பெற்றோர் எதிர்பார்ப்பு
பள்ளிகளில் ஆதார் முகாம்கள் நடத்த பெற்றோர் எதிர்பார்ப்பு
பள்ளிகளில் ஆதார் முகாம்கள் நடத்த பெற்றோர் எதிர்பார்ப்பு
ADDED : டிச 06, 2024 05:12 AM
திருவாடானை: ஆதார் திருத்தத்திற்காக மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்க பள்ளிகளில் முகாம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
திருவாடானை தாலுகாவில் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என 123 பள்ளிகள் உள்ளன. மத்திய, மாநில அரசு சார்பில் மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வுகள் அதிகளவில் நடத்தப்படுகின்றன. இதற்கான உதவித்தொகைகள் மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைப்பதால் ஆதார் ஆவணங்கள் பெயர் சரியாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இதனால் மாணவர்கள் திருத்தம் செய்ய தாலுகா அலுவலங்கள், இ-சேவை மையங்கள், தபால் அலுவலகங்களுக்கு செல்கின்றனர். அங்கே சென்றால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பல்வேறு காரணங்களால் சிலருக்கு நிராகரிக்கப்படுகிறது. ஆதார் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் நடப்பதால் அவ்வப்போது சர்வரும் முடங்கி பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது குறித்து பெற்றோர் கூறியதாவது:
ஆதார் திருத்தத்திற்கு சென்றால் பல்வேறு காரணங்களை கூறி அலைக்கழிக்கின்றனர். இதனால் மாணவர்கள் விரக்தி அடைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி ஆதார் திருத்தம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.