ADDED : பிப் 06, 2024 11:57 PM
அ நிறம் | அளவு
கடலாடி : கடலாடியில் உள்ள ஓட்டலில் தொண்டியை சேர்ந்த சகுபர் அலி 47, பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார்.
நேற்று மதியம் 2:00 மணிக்கு டூவீலருக்கு பெட்ரோல் போடுவதற்காக கடலாடி அரசு கல்லுாரி செல்லும் மலட்டாறு சாலையில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக வளைவில் திரும்பிய போது நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்ததில் சம்பவ இடத்தில் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.
