/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோரிக்கை மனுக்களுடன் முதல்வரை சந்திக்க காத்திருக்கும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள்
/
கோரிக்கை மனுக்களுடன் முதல்வரை சந்திக்க காத்திருக்கும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள்
கோரிக்கை மனுக்களுடன் முதல்வரை சந்திக்க காத்திருக்கும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள்
கோரிக்கை மனுக்களுடன் முதல்வரை சந்திக்க காத்திருக்கும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள்
ADDED : செப் 27, 2025 04:01 AM
திருப்புல்லாணி: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக 2012ம் ஆண்டில் 16,549 பகுதி நேர ஆசி ரியர்கள் பணியமர்த்தப் பட்டனர். தற்போது 12,483 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது 193 பேர் பகுதி நேர சிறப்பாசிரியர்களாக உள்ளனர்.
இவர்களுக்கான மாத சம்பளம் மே மாதம் தவிர்த்து ரூ.12,500 மட்டும் பெற்றுக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் பொருளாதார நெருக்கடியில் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில் கையில் கோரிக்கை மனுக்களுடன் உயரதிகாரிகள் மற்றும் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம், செயலாளர் வடிவேல் முருகன், பொருளாளர் பிரேம்குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
2016ல் தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையிலும், 2021 தேர்தல் அறிக்கையிலும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திடுவோம் எனக் கூறியுள்ளனர். அந்த வகையில் 2003 தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை 2006ம் ஆண்டு அரசாணை எண் 99 / 27.6.2006 அடிப்படையில் தி.மு.க., ஆட்சியில் காலமுறை ஊதியத்திற்கு மாற்றியது போல, தற்போது பணியாற்றி வரும் 12,483 பகுதி நேர சிறப்பாசிரியர்களை காலமுறை ஊதியத்திற்கு கொண்டுவர வேண்டும்.
எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை வலி யுறுத்தி தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் சமீபத்தில் கீழக்கரை வந்திருந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷிடம் மனு அளித்தோம். தற்போது ராமநாதபுரம் வரவுள்ள முதல்வர் ஸ்டாலினிடம் எங்களின் கோரிக்கைகளை முன் னிறுத்தி மனு அளிக்க உள்ளோம் என்றனர்.