/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் போட்டியிட கமலுக்கு கட்சியினர் அழைப்பு
/
ராமநாதபுரத்தில் போட்டியிட கமலுக்கு கட்சியினர் அழைப்பு
ராமநாதபுரத்தில் போட்டியிட கமலுக்கு கட்சியினர் அழைப்பு
ராமநாதபுரத்தில் போட்டியிட கமலுக்கு கட்சியினர் அழைப்பு
ADDED : பிப் 19, 2024 06:22 AM

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட அழைப்பு விடுத்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
பரமக்குடியில் பிறந்த கமல் சிறு வயதிலேயே சினிமாத்துறையில் நுழைந்து உலகநாயகன் பட்டம் பெற்றார். மக்கள்நீதி மய்யம் கட்சியை துவக்கி ராமேஸ்வரத்தில் இருந்து பிரசார பயணத்தையும் துவக்கினார். அவரதுகட்சி 7ம் ஆண்டு துவக்கத்தில் உள்ளது.
தேர்தலில் தனி ஆளாக போராடியவர் தற்போது தி.மு.க., கூட்டணியில் இணைந்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் பரமக்குடி நற்பணி இயக்க அணி, மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள், 'நாங்கள் பரமக்குடிக்கு அழைக்கிறோம், உங்களை பாராளுமன்றம் அழைக்கிறது' இந்தியன், என போஸ்டர்களை ஒட்டி வரவேற்றுள்ளனர்.
கமல் பரமக்குடியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க செயல் திட்டம் ஒன்றை தீட்டினார். ஆனால் அத்திட்டம் செயல்படுத்த முடியாமல் கிடப்பில் உள்ளது. இந்நிலையில் அவர் போட்டியிட அழைப்புவிடுத்து அவரதுகட்சியினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

