/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பயணிகள் தவிப்பு: ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் தரை சேதம்: ஓடாத பேட்டரி கார், லிப்ட் வசதியும் இல்லை

ADDED : பிப் 09, 2024 04:24 AM

ராமநாதபுரம்: மாவட்ட தலைநகரமான ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் பெயரளவில் மட்டுமே உள்ளது. குறிப்பாக பிளாட்பாரம் பராமரிக்கப்படாமல் தரைத்தளம் சேதமடைந்துள்ளது. இங்குள்ள பேட்டரி கார் காட்சிபொருளாக உள்ளது. லிப்ட் வசதியின்றி மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரம் ரயில் நிலையம் வழியாக ராமேஸ்வரத்திற்கு சென்னையில் இருந்து இரு எக்ஸ்பிரஸ் ரயில்களும், வட மாநிலங்களில் இருந்து பல்வேறு ரயில்கள், மதுரை-ராமேஸ்வரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. வாராந்திர ரயில்களாக திருப்பதி, வாரணாசி, செகந்திராபாத், ராஜஸ்தான் அஜ்மீர், அயோத்தி, பனாரஸ் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் காரைக்குடி, மானாமதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படுகிறது.
தற்போது ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரயில்வே பாலம் பணி நடப்பதால் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாரந்திர ரயில்கள் மண்டபம் வரை இயக்கப்படுகின்றன. ராமநாதபுரம் ரயில் நிலையத்தல் பிளாட்பாரம் பராமரிப்பின்றி தரைத்தளம் சேதமடைந்துள்ளது.
பல ஆண்டுகளாக பேட்டரி கார் இயங்குவது இல்லை. லிப்ட் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. குடிநீர் வசதியும் பெயரளவில் உள்ளதால் குடும்பத்துடன் வருபவர்கள், மாற்றுதிறனாளிகள், முதியோர் சிரமப்படுகின்றனர். கோச் பொசிசன் அறிவிப்பு போர்டுகள் இதுவரை அமைக்கப்படவில்லை.
எனவே சேதமடைந்த பிளாட்பார தரை தளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும். பேட்டரி காரை இயக்க வேண்டும். லிப்ட் வசதி செய்து தரவும், கோச் பொசிசன் அறிவிப்பு அமைக்கவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.