/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் 'பிரேக் டவுன்' ஆகும் அரசு பஸ்களால் பயணிகள் பாதிப்பு
/
பரமக்குடியில் 'பிரேக் டவுன்' ஆகும் அரசு பஸ்களால் பயணிகள் பாதிப்பு
பரமக்குடியில் 'பிரேக் டவுன்' ஆகும் அரசு பஸ்களால் பயணிகள் பாதிப்பு
பரமக்குடியில் 'பிரேக் டவுன்' ஆகும் அரசு பஸ்களால் பயணிகள் பாதிப்பு
ADDED : ஜூலை 13, 2025 11:00 PM

பரமக்குடி: பரமக்குடி மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் அடிக்கடி டவுன் மற்றும் தொலைதுார அரசு பஸ்கள் 'பிரேக் டவுன்' ஆகி நிற்பதால், பயணிகள் மற்றும் பின் தொடர்ந்து வரும் வாகனங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன.
குறிப்பாக பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் அருகில் நேற்று மதியம் 2:00 மணிக்கு பிரேக் டவுன் ஆகி நின்ற அரசு பஸ்சால் அப்பகுதியில் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பரமக்குடி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து 80க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதே போல் மதுரை, கும்பகோணம்,திருச்சி உள்ளிட்ட அனைத்து இடங்களில் இருந்து ஏராளமான பஸ்கள் பரமக்குடி வழியாக ராமேஸ்வரம் நோக்கி வந்து செல்கிறது.
இந்நிலையில் ஒவ்வொரு பணிமனையிலும் பஸ்களுக்கு தேவையான ஸ்பேர் பார்ட்ஸ்கள் போதிய அளவு இருப்புகள் இருப்பது கிடையாது. மெக்கானிக் பணிக்கு ஊழியர்களும் பற்றாக்குறை உள்ளது.
இச்சூழலில் ஆட்டோமேட்டிக் பஸ்கள் அதிக அளவு இயக்கப்படுகிறது. இவற்றை சரி செய்ய டூல் கிட்டுகள் இல்லாமல் மதுரை அல்லது திருச்சி போன்ற நகரங்களில் இருந்து எடுத்து வரவேண்டி உள்ளது.
இதனால் சிறிய அளவிலான பழுது ஏற்பட்டாலும், ஆட்டோமேட்டிக் பஸ்கள் நாள் முழுவதும் இயக்க முடியாமல் நடுவழியில் நிறுத்தும்படி உள்ளது.
இரவு நேரங்கள் அல்லது காட்டுப்பகுதிகளில் பஸ்கள் நிற்கும் சமயங்களில் பயணிகள் தங்களது உடைமைகள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தாருடன் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
நகருக்குள் மணி கணக்கில் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.
எனவே பஸ்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு பணிமனைகளில் போதிய ஊழியர்கள் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ்கள், டூல்கிட்டுகள் என வழங்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.