/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பயணிகள் பாதிப்பு:* பஸ் ஸ்டாண்டிற்குள் பிற வாகனங்களால்..* பஸ்கள் வந்து செல்வதில் தொடரும் சிக்கல்

ADDED : ஏப் 23, 2024 11:04 PM

ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் ரூ.20 கோடியில் சந்தைத்திடல் வரை விரிவாக்கம் பணி நடக்கிறது. இதன் காரணமாக பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் மதுரை ரோட்டில் மூலத்கொத்தளத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்க முடிவு செய்தனர்.
அதன் பிறகு தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படவில்லை. மாறாக போதுமான இடவசதி இல்லாத பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, துாத்துக்குடி, கும்பகோணம், புதுக்கோட்டை, திருநெல்வேலி ஆகிய வெளி மாவட்டங்கள், உள்ளூர் பகுதிகளுக்கு 200க்கு மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது.
தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் பஸ் நிறுத்தும் பகுதிகளில் டூவீலர்களை நிறுத்துகின்றனர். மேலும் அத்துமீறி பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் சில ஆட்டோக்களும் வந்து செல்கின்றன.
இதனால் பஸ்கள் நிறுத்தும் போதும், புறப்படும் போதும் நெரிசலால் கால தாமதம், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் பஸ்கள் மட்டும் வந்து செல்லும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
அத்துமீறி உள்ளே வரும் பிற வாகனங்களுக்கு அபராதம் விதிக்க நகராட்சி நிர்வாகம், போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.