/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
2 ஆண்டுகளுக்கு பின் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள்
/
2 ஆண்டுகளுக்கு பின் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள்
2 ஆண்டுகளுக்கு பின் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள்
2 ஆண்டுகளுக்கு பின் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள்
ADDED : ஏப் 08, 2025 06:44 AM

ராமேஸ்வரம் : இரண்டு ஆண்டுகளுக்கு பின் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் வந்தனர்.
பாம்பன் கடலில் 1914ல் அமைத்த ரயில் பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலத்தில் 2022 டிச., 23ல் இரும்பு பிளேட் சேதமடைந்து ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ரூ.535 கோடியில் புதிய ரயில் பால கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன. பணிகள் முடிந்து நேற்று முன்தினம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
ரயில் இல்லாததால் 2 ஆண்டுகளுக்கும் மேலாக ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் வெறிச்சோடியது. புதிய பாலம் திறப்புக்கு பின் ராமேஸ்வரத்திற்கு நேற்று முதல் ரயில்கள் வந்து செல்கின்றன. இதனால் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் வர துவங்கினர்.