/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை
/
நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை
நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை
நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை
ADDED : ஜூன் 11, 2025 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : தொண்டியில் இருந்து காலை 9:15 மணிக்குதிருவாடானை வழியாக குமுளிக்கு அரசு பஸ் இயங்கி வந்தது. குறிப்பிட்ட சில பஸ் ஸ்டாப்புகளில் மட்டும் நிறுத்தப்பட்டதால் சீக்கிரமாக மதுரை செல்ல விரும்பும் பயணிகள், இந்த பஸ்சில் பயணம் செய்தனர். இந்நிலையில் மூன்று மாதங்களாக குமுளி பஸ்சை நிறுத்தி விட்டனர்.
இது குறித்து தொண்டி மாலிக் கூறுகையில், தொண்டியில் இருந்து மதுரைக்கு இரண்டரை மணி நேரத்தில் குமுளி பஸ் சென்று விடும். இந்த பஸ் நிறுத்தப்பட்டதால் சிரமம் ஏற்பட்டுள்ளது. தொண்டி- குமுளி பஸ்சை மீண்டும் இயக்க அரசு போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.