/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு சட்டக் கல்லுாரி முன்பு பயணியர் நிழற்குடை தேவை வெயில் மற்றும் மழையில் அவதி

ADDED : அக் 29, 2025 08:22 AM
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே குதக்கோட்டை ஊராட்சியில் செயல்படும் ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லுாரி அருகில் பயணியர் நிழற்குடை இல்லாததால் வெயில் மற்றும் மழையில் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
2024 ஆக., முதல் புதிய அரசு சட்டக் கல்லுாரி கட்டடம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. சட்டக் கல்லுாரியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் சட்டம் படிக்கின்றனர். ராமநாதபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய மாணவர்கள் சட்டக் கல்லுாரிக்கு வருகின்றனர். அரசு சட்டக் கல்லுாரியின் முன்பாக எவ்வித மர நிழலும் இன்றி திறந்த வெளியாக இருப்பதால் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
சட்டக்கல்லுாரி மாணவர்கள் கூறியதாவது: ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லுாரியின் முன்பாக மாணவர்களின் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி புதிதாக பயணியர் நிழற்குடை கட்டடம் அவசிய தேவையாக உள்ளது. டவுன் பஸ்சிற்காக வெளியே காத்திருக்கும் போது வெயில் மற்றும் மழையால் பெரும் சிரமத்தை சந்திக்கிறோம். எனவே புதிய பயணிகள் நிழற்குடை கட்ட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.