பஸ்கள் பெயரளவில் இயக்கம்:காத்திருந்து பயணிகள் அவதி
பஸ்கள் பெயரளவில் இயக்கம்:காத்திருந்து பயணிகள் அவதி
ADDED : ஏப் 23, 2026 09:10 PM

ராமநாதபுரம்: சட்டசபை தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரத்தில் வெளியூர், உள்ளூர்களுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பஸ் ஸ்டாண்டில் குவிந்த பயணிகள் நீண்டநேரம் காத்திருந்து சிரமப்பட்டனர்.
நேற்று தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு அனைவருக்கும் பொது விடுமுறை வழங்கப்பட்டது. இதன் காரணமாக சொந்த ஊர் மற்றும் வெளியூர்காரர்கள் ஓட்டளிக்க தங்களது ஊர்களுக்கு செல்வதற்காக ஏராளமான பயணிகள் பஸ் ஸ்டாண்டில் குவிந்தனர். அதற்கு ஏற்றவாறு பஸ்கள் இயக்கப்படாததால் அரை மணி நேரத்திற்கும் மேலாக பஸ்ஸ்டாண்டில் காத்திருந்தனர்.
குடும்பத்துடன் வந்தவர்கள் குழந்தைகளுடன் சிரமப்பட்டனர். இது மாதிரி பொது விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டத்திற்கு ஏற்ப வெளியூர்கள் மட்டுமின்றி உள்ளூர்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.--
