தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பஸ்கள் பெயரளவில் இயக்கம் : காத்திருந்து பயணிகள் அவதி

பஸ்கள் பெயரளவில் இயக்கம் : காத்திருந்து பயணிகள் அவதி

பஸ்கள் பெயரளவில் இயக்கம் : காத்திருந்து பயணிகள் அவதி


ADDED : அக் 22, 2025 12:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2025 12:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டுராமநாதபுரத்தில் வெளியூர்,உள்ளூர்களுக்கு சிறப்பு பஸ்கள் பெயரளவில் இயக்கப்பட்டதால் பஸ் ஸ்டாண்டில் குவிந்த பயணிகள் நீண்டநேரம் காத்திருந்து சிரமப்பட்டனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஒவ்வொரு பண்டிகைகள், தொடர் விடுமுறை நாட்களில் கூடுதலாக மாவட்டந்தோறும் பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கின்றனர். ஆனால் அவ்வாறு இல்லாமல் வழக்கமான பஸ்களை சிறப்பு பஸ்களாக இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக வெளியூர் செல்பவர்கள், சொந்த ஊருக்கு வருபவர்கள் சிரமப்படுகின்றனர்.

நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை முடிந்து நேற்று விடுமுறை தினம் என்பதால் சொந்த ஊர் மற்றும் வெளியூர்கள், சுற்றுலா பகுதிகளுக்கு செல்வதற்காக ஏராளமான பயணிகள் பஸ் ஸ்டாண்டில்குவிந்தனர். அதற்கு ஏற்றவாறு பஸ்கள் இயக்கப்படாததால் அரை மணி நேரத்திற்கும் மேலாக பஸ் ஸ்டாண்டில் காத்திருந்துகுடும்பத்துடன் வந்தவர்கள் குழந்தைகளுடன் சிரமப்பட்டனர்.

பயணிகள் கூட்டத்திற்கு ஏற்ப வெளியூர்கள் மட்டுமின்றி உள்ளூர்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us