/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலம் திறந்து மூட 3 மணி நேரம் தாமதம் பயணிகள் அவதி
/
பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலம் திறந்து மூட 3 மணி நேரம் தாமதம் பயணிகள் அவதி
பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலம் திறந்து மூட 3 மணி நேரம் தாமதம் பயணிகள் அவதி
பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலம் திறந்து மூட 3 மணி நேரம் தாமதம் பயணிகள் அவதி
ADDED : ஜூலை 13, 2025 12:57 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் திறந்து மூட 3 மணி நேரம் தாமதம் ஆனதால் பாம்பன் பாலத்தை ரயில்கள் தாமதமாக கடந்து சென்றன.
பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலத்தை ஏப்., 6ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இப்பாலத்தின் நடுவில் உள்ள துாக்கு பாலம் ஆசியாவிலே முதன் முதலாக லிப்ட் முறையில் இயங்கும் வகையில் வடிவமைத்தனர். கடைசியாக மே 21ல் புதிய துாக்கு பாலத்தை திறந்து மூடினர்.
மும்பையில் இருந்து ஒடிசா பாரதீப் செல்ல ஒரு இழுவை கப்பல் நேற்று முன்தினம் பாம்பன் வந்தது. இதற்காக நேற்று மதியம் 12:45 மணிக்கு பழைய ரயில் துாக்கு பாலம் திறந்ததும், புதிய துாக்கு பாலம் திறக்க அலாரம் ஒலி எழுப்பினர்.
ஆனால் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் மதியம் 1:50 மணிக்கு தான் திறக்கப்பட்டது. அதன்பின் இழுவை கப்பல், நாகை சென்ற ஆழ்கடல் விசைப்படகு, 10 உள்ளூர் மீன்பிடி படகுகள் கடந்து சென்றன.
மதியம் 2:30 மணிக்கு பாலத்தை மூட முயன்ற போதும் மூடவில்லை. ரயில்வே பொறியாளர்கள் திணறினர். மதியம் 3:45 மணிக்கு துாக்கு பாலம் மூட முடிந்தது. புதிய துாக்கு பாலத்தை திறந்து மூட 3 மணி நேரம் ஆனதால் ராமேஸ்வரத்தில் மதியம் 2:35க்கு புறப்பட்ட விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரயில் பாம்பன் பாலத்தை மாலை 4:05 மணிக்கு கடந்து சென்றது.மதியம் 2:40 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சிக்கு புறப்படும் பாசஞ்சர் ரயில் மாலை 4:15 மணிக்கும், மாலை 4:20 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து தாம்பரம் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் 20 நிமிடம் தாமதமாக பாலத்தை கடந்து சென்றன. இதனால் ரயில் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
என்ன கோளாறு
புதிய துாக்கு பாலம் 4வது முறையாக நேற்று திறக்கப்பட்டது. அதில் சிக்கல் எற்பட்டுள்ளது. துாக்கு பாலத்தை துாக்கும் இரும்பு கம்பி வடங்கள் மேலே கேபின் அருகில் உள்ள ராட்சத வீலில் காற்றால் சரியாக நிற்காததால் திறந்து மூடுவதில் பிரச்னை ஏற்படுகிறது என ஊழியர்கள் தெரிவித்தனர்.

