/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் நெரிசலில் பயணிகள் தவிப்பு
/
பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் நெரிசலில் பயணிகள் தவிப்பு
பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் நெரிசலில் பயணிகள் தவிப்பு
பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் நெரிசலில் பயணிகள் தவிப்பு
ADDED : ஜன 02, 2024 05:12 AM

பரமக்குடி: -பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் நாள் முழுவதும் பயணிகள் கூட்டம் அலைமோதும் நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் இல்லாததால் பயணிகள் நிற்க இடமின்றி தவிக்கும் நிலை உள்ளது.
பரமக்குடி நகராட்சியில் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நிலையில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பரமக்குடியில் இருந்து தொலைதுாரம் மற்றும் டவுன் பஸ்கள் 80க்கும் மேல் இயக்கப்படுகின்றன.
மேலும் ராமேஸ்வரம், மதுரை மார்க்கத்தில் செல்லும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் இங்கு வந்து செல்கின்றன. ஆனால் பஸ் ஸ்டாண்ட் பல ஆண்டுகளாக அதே கட்டமைப்பிலேயே உள்ளது. இதன்படி பஸ் ஸ்டாண்டை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கடைகள் பயணிகள் நடை பாதை, நிற்கும் இடங்களில் ஆக்கிரமித்துஉள்ளனர்.
பூ வியாபாரிகள், தெருவோர வியாபாரிகள் பஸ் நிறுத்தப்படும் ரேக்குகளில் கடைகளை விரிக்கின்றனர். இதனால் நீண்ட நேரம் பஸ்களுக்காக காத்திருக்கும் பயணிகள் பஸ் ஸ்டாண்ட் நடுவில் நிற்கும் நிலை உள்ளது. பஸ்களை ரேக்குகளில் முறையாக நிறுத்த முடியாமல் ஆங்காங்கே நிறுத்துகின்றனர்.
தொடர்ந்து நிழல் தேடி பஸ்களுக்கு அருகில் தங்கள் உடைமைகள் மற்றும் குழந்தைகளுடன் பரிதாபத்துடன் பயணிகள் இருக்கின்றனர். மேலும் விசேஷ நாட்களில் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து வரும் பஸ்களால் பயணிகள் மூடை முடிச்சுகளுடன் தவிக்கின்றனர்.
எனவே பயணிகளின் நலன்கருதி விபத்தில்லா பயணத்திற்கு வசதியாக போக்குவரத்து துறையினரும் போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

