/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாரதிநகர் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை இல்லாததால் பயணிகள் அவதி
/
பாரதிநகர் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை இல்லாததால் பயணிகள் அவதி
பாரதிநகர் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை இல்லாததால் பயணிகள் அவதி
பாரதிநகர் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை இல்லாததால் பயணிகள் அவதி
ADDED : மே 22, 2025 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் திருவாடானை பாரதிநகர் பஸ்ஸ்டாப்பில் நிழற்கூரை இருந்தது.
அந்த நிழற்கூரை சேதமடைந்ததால் சில மாதங்களுக்கு முன்பு இடித்து அப்புறப்படுத்தபட்டது. ஆனால் மீண்டும்நிழற்கூரை அமைப்பதற்கான நடவடிக்கை இல்லை.
இதனால் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு மக்களும், அரசு பெண்கள்மேல்நிலைப்பள்ளி மாணவிகளும் இங்கு வந்து பஸ் ஏறி செல்வார்கள். நிழற்கூரை இல்லாததால் பயணிகள் மரநிழலில் நிற்கின்றனர். இந்த ஆண்டில் கோடை வெயில் கொளுத்தும் நிலையில் மக்கள் அவதிப்படுகின்றனர்.
அதே போல் சில நாட்களாக பெய்த தொடர் மழையில் அவதிப்பட்டனர்.