/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நடுரோட்டில் போக்குக் காட்டும் அரசு பஸ்களால் பயணிகள் அவதி
/
நடுரோட்டில் போக்குக் காட்டும் அரசு பஸ்களால் பயணிகள் அவதி
நடுரோட்டில் போக்குக் காட்டும் அரசு பஸ்களால் பயணிகள் அவதி
நடுரோட்டில் போக்குக் காட்டும் அரசு பஸ்களால் பயணிகள் அவதி
ADDED : டிச 29, 2024 04:18 AM

உத்தரகோசமங்கை: ராமநாதபுரத்தில் இருந்து உத்தரகோசமங்கை வழியாக பூசேரி மற்றும் முதுகுளத்துார் செல்லும் அரசு புறநகர் பஸ் சேதமடைந்த நிலையில் இயக்கப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
நேற்று ராமநாதபுரத்தில் இருந்து 70 பயணிகளுடன் சென்ற புறநகர் அரசு பஸ் உத்தரகோசமங்கை அருகே பனைக்குளம் பகுதியில் பயணிகளை இறக்கி விட்டவுடன் நின்றது. 'ஸ்டார்ட்டிங்' பிரச்னையால் பயணிகள் தள்ளிவிட்ட பின்னர் பஸ் இயங்கியது.
உத்தரகோசமங்கை கிழக்கு ரத வீதியின் வழியாக சென்ற போது பயணிகளை இறக்கி விட்ட பஸ் மீண்டும் புறப்படும் போது இயங்காமல் நின்றது.
பின்னர் மீண்டும் பயணிகள் மூலம் பஸ் தள்ளி விடப்பட்டு இயக்கப்பட்டது. சிறிது நேரம் சென்றவுடன் ரேடியேட்டரில் தண்ணீர் இல்லாததால் பஸ் சாலையோரம் நின்றது. உத்தரகோசமங்கை கண்மாயில் இருந்து கண்டக்டர் ஒரு வாளியில் தண்ணீர் அள்ளி டிரைவரிடம் கொடுக்க டிரைவர் மற்றும் பயணி ரேடியட்டரை நீரூற்றி நிரப்பினர்.
பின்னர் ஒரு வழியாக பஸ் முதுகுளத்துார் சென்றடைந்தது. பயணிகள் கூறியதாவது: கிராமப்புறங்களுக்கு செல்லக்கூடிய புறநகர் பஸ் சேதமடைந்த நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் பஸ் ஒழுகுவதும், இதர காலங்களில் அடிக்கடி நிற்பது வாடிக்கையாக உள்ளது. எனவே போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ்ஸை உரிய முறையில் பழுது நீக்கி இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.