ADDED : ஜன 12, 2026 06:39 AM

அ நிறம் | அளவு
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தீயனுார் விலக்கு ரோட்டில் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. அதில் பயணித்த இருவர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே ராஜாக்கள்பட்டி பக்தபிரகலாதன் 46, தனது சகோதரி ராமபிரபாவோடு காரில் மானாமதுரை அருகே ராஜாக்கள் குடியிருப்பு பகுதிக்கு உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு வந்தார். நேற்றுமாலை மதுரை -- ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் தீயனுார் விலக்கு அருகே வந்த போது, காரின் முன் பகுதி திடீரென தீப்பற்றி எரிந்தது. தொடர்ந்து கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இதில், அதிர்ஷ்டவசமாக காரில் வந்த இருவரும் வெளியேறி தப்பினர். மானாமதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் வீரர்கள் தீயை அணைத்தனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
