/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் தலைமை, துணை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை
/
ராமநாதபுரம் தலைமை, துணை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை
ராமநாதபுரம் தலைமை, துணை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை
ராமநாதபுரம் தலைமை, துணை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை
ADDED : பிப் 17, 2024 10:53 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தலைமை தபால் நிலையம் மட்டுமின்றி அனைத்து துணை தபால் நிலையங்களிலும் பாஸ்போர்ட் சேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவா கேந்த்ரா செயல்படுகிறது. இதற்கு முன் பாஸ்போர்ட் சேவை பெற மதுரை சென்றனர். இந்நிலை மாறி ராமநாதபுரம் மாவட்ட மக்கள் அலைச்சல் இன்றி பாஸ்போர்ட் சேவையை ராமநாதபுரத்தில் பெறுகின்றனர். தற்போது தினமும் சராசரியாக 50 விண்ணப்பங்கள் முன்பதிவு அடிப்படையில் பரிசீலனை செய்யப்படுகிறது. மேலும் இச்சேவை விரிவுபடுத்தப்பட்டு பாஸ்போர்ட் சேவையை பெற முன்பதிவிற்கு மாவட்டத்தில் உள்ள தலைமை, துணை தபால் நிலையங்களில் பொதுமக்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம்.
ராமநாதபுரம் தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண்ணப்பதாரர் அவருக்கு வசதியான தேதியை தேர்வு செய்து முன்பதிவு செய்யலாம் என ராமநாதபுரம் கோட்டக் கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார்.