ADDED : அக் 31, 2024 01:21 AM

கமுதி; கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் 117- வது ஜெயந்தி விழா, 62-வது குருபூஜை விழா நேற்று நடந்தது. விழாவில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், எம்.பி., தர்மர், அ.தி.மு.க., சார்பில் பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் சுந்தரபாண்டியன், முதுகுளத்துார் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., பாண்டியன்.
முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனர்கருணாஸ், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் கமுதி தமிழ்ச்செல்வி போஸ், முதுகுளத்துார் சண்முகப்பிரியா ராஜேஷ், அ.தி.மு.க.,ஒன்றிய செயலாளர்கள் கமுதி தெற்கு காளிமுத்து, கடலாடி முனியசாமி பாண்டியன், சாயல்குடி மேற்கு அந்தோணி ராஜ், சாயல்குடி மத்திய பகுதி ராஜேந்திரன், முதுகுளத்துார் மேற்கு கர்ணன், மத்திய பகுதி செந்தில்குமார், கமுதி வடக்கு ராஜேந்திரன், தெற்கு கருமலையான், சாயல்குடி கிழக்கு பிரவீன்குமார், முதுகுளத்துார் கிழக்கு கருப்புசாமி.
நகர செயலாளர்கள் முதுகுளத்துார் முத்துராமலிங்கம், சாயல்குடி ஜெயபாண்டியன், கமுதி மணிமுருகன், மாவட்ட விவசாய அணி செயலாளர் சண்முகபாண்டியன், மாவட்ட இளைஞரணி தலைவர் முத்துராமலிங்கம், கமுதி அவைத்தலைவர் சேகரன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் தமிழ்வாணன், மாவட்ட ஜெ., பேரவை செந்துாரான், முதுகுளத்துார் பேரூராட்சி தலைவர் ஷாஜகான், துணைத் தலைவர் வயணபெருமாள்.
ம.தி.மு.க., சார்பில் துரை, மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ், நகராட்சி துணைத் தலைவர் குணா, மாவட்ட துணைச் செயலாளர் பழ சரவணன், பரமக்குடி நகர் செயலாளர் இசைமணி, பரமக்குடி ஒன்றிய செயலாளர் உதயகுமார், பரமக்குடி நகர் இளைஞரணி செயலாளர் பாக்கியம், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார். ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, ஆர்.எஸ்.மங்கலம் நகர் தி.மு.க., செயலாளர் கண்ணன் உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.