/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பசும்பொன்னார் நகரில் ஐந்து மாதமாக குடிநீர் வரவில்லை: பொதுமக்கள் அவதி

ADDED : ஜூலை 10, 2025 02:38 AM
சாயல்குடி: சாயல்குடி அருகே பெரியகுளம் ஊராட்சி பசும்பொன்னார் நகரில் 5 மாதங்களாக காவிரி குடிநீர் சப்ளை இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைகின்றனர்.
பெரியகுளம் ஊராட்சி மலட்டாறு அருகே பசும்பொன்னார் நகர் அமைந்துள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இங்கு காவிரி குடிநீர் வினியோகம் செய்யாமல் அமைக்கப்பட்ட பைப் லைன்கள் காட்சி பொருளாக உள்ளது. இது குறித்த அப்பகுதி மக்கள் கூறியதாவது:
காவிரி குடிநீர் அருகில் உள்ள கிராமங்களுக்கு வினியோகம் செய்யும் போது எங்கள் கிராமம் தண்ணீர் வினியோகம் இன்றி காட்சி பொருளாக உள்ளது.
காவிரி குடிநீர் முறையாக பராமரிப்பு செய்யாததால் பிரதான குழாய்களில் உடைப்பெடுத்து ஓடுகிறது. அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இந்நிலையில் தண்ணீர் இன்றி கஷ்டப்படுகிறோம். எனவே காவிரி குடிநீரை முறையாக எங்கள் பகுதியில் வினியோகம் செய்ய வேண்டும். பெரியகுளம் ஊராட்சி சார்பில் குடிநீர் கட்டணத்தை செலுத்தி வரும் நிலையில் தண்ணீர் வழங்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்றனர்.