/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வழிவிடு முருகன் கோயில் பால்குட விழா
/
வழிவிடு முருகன் கோயில் பால்குட விழா
ADDED : பிப் 29, 2024 10:27 PM

பரமக்குடி, - பரமக்குடி திருவள்ளுவர்நகர் வழிவிடு முருகன் கோயிலில் திருச்செந்துார்முருகன் மிதிவண்டி பயணக் குழு சார்பில் பால்குட விழா நடந்தது.
இக்குழு சார்பில் 44வதுஆண்டாக திருச்செந்துாருக்கு பக்தர்கள் சைக்கிளில் பயணம் செல்ல உள்ளனர். இதையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு பால்குடம் விழா நடந்தது.
பரமக்குடி பெருமாள் கோயில் வைகை ஆறு படித்துறையில் பால் குடங்கள், பறவை காவடி, மயில் காவடி, வேல் குத்துதல் என நிறைவடைந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர்.
பின்னர் கோயிலை அடைந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு ஏராளமான பெண்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.

