/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நோயாளிகள் அலைக்கழிப்பு: எக்ஸ்ரே எடுப்பதற்கான பிலிம் இருப்பு இல்லை: மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அவலம்

ADDED : அக் 17, 2024 05:16 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் எக்ஸ்ரே பிலிம் இல்லாததால் தனியார் எக்ஸ்ரே மையங்களுக்கு செல்லுமாறு நோயாளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, பல் மருத்துவப்பிரிவு, காச நோய் பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகள் செயல்படுகின்றன. இங்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகளும், 500க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர்.
இவர்களுக்கு எக்ஸ்ரே எடுப்பதற்கு எக்ஸ்ரே மையத்திற்கு டாக்டர்கள் அனுப்புகின்றனர். அங்கு ஏதாவது ஒரு காரணத்தால் தொடர்ந்து நோயாளிகளை அலைக்கழிப்பு செய்கின்றனர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வரை எக்ஸ்ரே இயந்திரம் பழுது காரணமாக நோயாளிகள் அலைக்கழிக்கப்பட்டனர்.
அதனை சரி செய்த நிலையில் தற்போது நான்கு நாட்களாக எக்ஸ்ரே எடுக்கும் பிலிம் இல்லாததால் நோயாளிகளை தனியார் எக்ஸ்ரே மையங்களுக்கு அனுப்பி வைக்கும் நிலை உள்ளது. நாள் ஒன்றுக்கு குறையால் 120க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுக்கப்படும் நிலையில் பிலிம் இல்லாததால் நோயாளிகளை வெளியில் அனுப்பி அலைக்கழிப்பு செய்கின்றனர்.
எக்ஸ்ரே மையத்தில் நோயாளிகளிடம் ரூ.50 கட்டணம் வசூலிக்கின்றனர். இதற்கான ரசீது முறையாக நோயாளிகளுக்கு வழங்கப்படுவதில்லை. அரசு மருத்துவக்கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எக்ஸ்ரே மையம் முறையாக செயல்படவும், எக்ஸ்ரே எடுக்கும் நோயாளிகளிடம் வசூலிக்கும் கட்டணத்திற்கு ரசீது வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரசீது கொடுக்காமல் கட்டணம் வசூலிப்பதால் எக்ஸ்ரே மைய பணியாளர்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையே தினமும் வாக்குவாதம், பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் வசூலிக்கப்படும் கட்டணம் முறையாக அரசுக்கு சென்று சேர்கிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.