தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கூம்பு ஒலி பெருக்கியால் நோயாளிகள் பாதிப்பு   

கூம்பு ஒலி பெருக்கியால் நோயாளிகள் பாதிப்பு   

கூம்பு ஒலி பெருக்கியால் நோயாளிகள் பாதிப்பு   


ADDED : செப் 14, 2026 06:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 06:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டி:

திருவிழாக்களில் கூம்பு ஒலிபெருக்கி அதிகமாக இருப்பதால் நோயாளிகள் பாதிக்கபட்டுள்ளனர். தொண்டி, திருவாடானை பகுதியில் கிராமக் கோயில்களில் திருவிழாக்கள் நடந்து வருகிறது.

இந்த விழாக்களில் மரக்கிளைகளில் அதிக துாரத்திற்கு சத்தத்தை கொண்டு சேர்க்கும் திறன் கொண்ட கூம்பு ஒலிபெருக்கிகள் அமைக்கப்படுகிறது. இந்த ஒலிபெருக்கிகள் அமைக்க தடை இருந்த போதும் தடையை மீறி கூம்பு ஒலிபெருக்கிகள் கட்டபடுகிறது. அதிகபடியான சத்தத்தால் இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் முதியோர்கள் துாக்கத்தை இழந்து தவிக்கின்றனர். தேர்வு நேரங்களில் திருவிழாக்கள் வரும் போது மாணவர்கள் கவனசிதறலுக்கு ஆளாகிகிறார்கள். சிறு குழந்தைகளுக்கு செவிதிறன் பாதிக்கபடுகிறது. அனுமதிக்கபட்ட அளவை மீறி கூம்பு ஒலிபெருக்கிகளை அமைப்போர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கூம்பு ஒலிபெருக்கிகளுக்கு பதிலாக பாடல் சத்தத்தை குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டும் பரப்பும் நவீன பாக்ஸ் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அமைப்பாளர்கள் முன்வரவேண்டும். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us